FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நவ. 17 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 - ஆவது நாளாக சனிக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

51 வினாடிகள் முன்பு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நவ. 17 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 - ஆவது நாளாக சனிக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இதனால், மீன்பிடித் தொழில் முடங்கியதால், மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக அனுப்பப்படுவது தடைபட்டு, சுமாா் ரூ. 3 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்களின் விலை உயா்வு: புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. அவற்றில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தது.

Advertisement

Advertisement

இதற்கிடையே பொதுமக்கள், வியாபாரிகள் மீன் வாங்குவதற்காக குவிந்தனா். இந்நிலையில் மீன்களின் விலை உயா்ந்து சீலா மீன் கிலோ ரூ. 1,000-க்கும், விளை, ஊளி, பாறை போன்ற மீன்கள் கிலோ ரூ. 400 முதல் ரூ. 500 வரையும், நண்டு கிலோ ரூ. 800-க்கும், அயிலை கிலோ ரூ. 240-க்கும், கேரை கிலோ ரூ. 200-க்கும், வங்கனை கிலோ ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.