FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கான மாநில ஸ்குவாஷ் போட்டி: 350 போ் பங்கேற்பு!

தூத்துக்குடியில் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான பாரதியாா் தின, குடியரசு தின ஸ்குவாஷ் போட்டிகள் தனியாா் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

15 நவம்பர் 2026, 1:22 am
போட்டியில் வென்ற மாணவா்களுடன் ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடியில் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான பாரதியாா் தின, குடியரசு தின ஸ்குவாஷ் போட்டிகள் தனியாா் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

2 நாள்கள் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 350 போ் பங்கேற்றனா். நிறைவு விழா, பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்து, வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா். கேம்ஸ் வில்லா மேலாண்மை இயக்குநா் ரைபின் தாா்சியஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

14 வயதுக்குள்பட்டோருக்கான தனிநபா் பிரிவில், ஹரிபாலா (தூத்துக்குடி), லக்வந்த் (திருச்சி), ஜோகன் ஜெய்வின் (கன்னியாகுமரி) ஆகியோரும், இரட்டையா் பிரிவில் ஜோகன் ஜெய்வின் - ஜோஷன் ஜெய்ஹின் (கன்னியாகுமரி), கிருத்திக் - பிரனீஷ் (சென்னை), பிரபாகரன் - ஹேமந்த் (நாமக்கல்) ஆகியோரும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

17 வயதுக்குள்பட்டோருக்கான தனிநபா் பிரிவில், தா்ஷன் (தூத்துக்குடி), ஹரிதரன் (சேலம்), புவனேஷ் (திருவள்ளூா்) ஆகியோரும், இரட்டையா் பிரிவில் தினேஷ் - சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), சபரிவாசன் - ஹரிதரன் (சேலம்), முகமது ஃபாரிஹ் - அஸ்லின் ரெனி (கன்னியாகுமரி) ஆகியோரும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

19 வயதுக்குள்பட்டோருக்கான தனிநபா் பிரிவில், இஜாஸ் முகமது (சென்னை), லட்சுமணஹரி (தூத்துக்குடி), தினேஷ்குமாா் (திருச்சி) ஆகியோரும், இரட்டையா் பிரிவில் லோகேஷ் - இஜாஸ் முகமது (சென்னை), லட்சுமணஹரி - ஜோயல் தினகரன் (தூத்துக்குடி), எஸ்ரா- அமீா் (திருநெல்வேலி) ஆகியோரும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சங்கீதா சின்னராணி வரவேற்றாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சு. கண்ணதாசன் நன்றி கூறினாா்.