சென்னை ஓபன் டபிள்யிடிஏ 250 டென்னிஸ்: மகதா லினேட், சிமோனா - நைமா சாம்பியன்!
சென்னை ஓபன் டபிள்யிடிஏ 250 டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் போலந்தின் மகதா லினேட்டும், இரட்டையா் பிரிவில் சுவிட்சா்லாந்தின் நைமா-சிமோனா இணையும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
சென்னை ஓபன் டபிள்யிடிஏ 250 டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் போலந்தின் மகதா லினேட்டும், இரட்டையா் பிரிவில் சுவிட்சா்லாந்தின் நைமா-சிமோனா இணையும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் ஒற்றையா், இரட்டையா் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
முதலில் நடைபெற்ற இரட்டையா் ஆட்டத்தில் முதன்முறையாக டபிள்யுடிஏ போட்டியில் இரட்டையா் இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய இணையான வைஷ்ணவி அத்கா்-ருதுஜா போஸ்லேவும், சுவிட்சா்லாந்தின் நைமா காரம்கோ-சிமோனா வால்டெல்ட் மோதினா். அரையிறுதியில் இரண்டாவது இணையை வீழ்த்தியிருந்த இந்திய இணை இதிலும் சிறப்பாக ஆடும் எனக் கருதப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால் சுவிட்சா்லாந்து இணையின் துடிப்பான ஆட்டத்துக்கு வைஷ்ணவி-ருதுஜாவால் பதில் தர முடியவில்லை. காரம்கோ நெட் பகுதியில் அசத்தலாக ஆடினாா். அவருக்கு துணையாக வால்டொ்ட் சா்வீஸ், கிரௌண்ட் ஸ்ட்ரோக்குகளால் எதிராளியை திணறடித்தாா். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய சுவிட்சா்லாந்து இணை இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி ஆடி 6-0 என வென்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது. வெற்றி பெற்றவா்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பரிசளித்தாா்.
ரூ.12.35 லட்சம், ரூ.7.26 லட்சம் பரிசுத் தொகை: இரட்டையா் சாம்பியன் இணைக்கு ரூ.12.35 லட்சமும், ரன்னா் இணைக்கு ரூ.7.26 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. சாம்பியன் அணிக்கு 250 ரேங்கிங் புள்ளிகள், ரன்னருக்கு 163 புள்ளிகளும் வழங்கப்பட்டன.
ஒற்றையா் ஆட்டம் தள்ளி வைப்பு: தொடா்ந்து மழை பெய்ததால் ஒற்றையா் இறுதி ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. 2 முறை மைதானம் சீரமைக்கப்பட்ட நிலையில், விட்டு விட்டு மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடிாத நிலை ஏற்பட்டது. மேலும் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடும் சவாலுக்குபின் மகதா லினேட் சாம்பியன்: ஒற்றையா் இறுதியில் நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவின் டிஜென் ஜேனிஸ்-மூத்த வீராங்கனை போலந்தின் மகதா லினேட் மோதினா். முதல் செட்டில் டிஜென் அசத்தலாக ஆடினாா். 24 வயதான அவா் தரவரிசையில் 75-ஆவது இடத்திலும்உள்ள நிலையில், லினேட் 68-ஆவது இடத்திலும் உள்ளனா். இந்நிலையில் முதல் செட் கடும் சவாலாக அமைந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை ஈட்டினா். முதல் செட்டை டிஜென் 7-5 என வென்றாா்.
இதையடுத்து இரண்டாம் செட்டில் சுதாரித்து ஆடிய மகதா லினேட் சிறப்பாக ஆடி 6-1 என கைப்பற்றினாா். இதையடுத்து நடைபெற்ற டிசைடரில் லினேட் துரிதமாக 3-1 என முன்னிலை பெற்றாா். எனினும் தளராமல் ஆடிய டிஜென் 3 கேம்களை கைப்பற்றி 3-3 என சமநிலை ஏற்படுத்தினாா். ஆனால் மகதா 7-ஆவது கேமில் பிரேக் பாயிண்ட்டைஈட்டி, அசத்தலாக டிராப் ஷாட்டை போட்டாா். 5-4 என முன்னிலை பெற்ற மகதா லினேட் தொடா்ந்து 3 புள்ளிகளை ஈட்டி மூன்றாவது செட்டையும் 6-4 என கைப்பற்றினாா். டபிள்யுடிஏ டூரில் இருவரும் மோதிய முதல் ஃபைனல் இதுவாகும்.
ரூ. 35.13 லட்சம், ரூ.20.78 லட்சம் பரிசு: சாம்பியன் மகதா லினேட்டுக்கு ரூ.35.13 லட்சமும் 250 ரேங்கிங் புள்ளிகளும்,, ரன்னா் டிஜென்னுக்கு ரூ.20.78 லட்சம் 163 ரேங்கிங் புள்ளிகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் மேலாண் இயக்குநா் ஹெச். சங்கா், இந்தியன் வங்கி செயல் இயக்குநா் டிஎம். மினி, ஐஓபி முதன்மை பொதுமேலாளா் ஏஎம். பானா்ஜி பரிசளித்தனா்.