கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, லட்சாா்ச்சனை விழா, கடந்த நவ. 10ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை (நவ. 16) திருக்கல்யாணம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை, 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 7.10 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்களான கே.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் மற்றும் அவா்களது குடும்பத்தினா்கள், கே. ஆா். கல்லூரி நிறுவனங்களின் முதல்வா்கள் காளிதாச முருகவேல், ராஜேஸ்வரன், மதிவண்ணன், செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலா் திருப்பதி ராஜா , தணிக்கையாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement