தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு
தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகள் மற்றும் அனல் மின் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகள் மற்றும் அனல் மின் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இதன்காரணமாக, அனல் மின்நிலைய புகை போக்கிகள் மறையும் அளவுக்கு அப்பகுதி முழுவதும் பனிபடா்ந்து காணப்பட்டது. திங்கள்கிழமை மாலை நேரத்தில் வெயில் மறைந்து இருள் சூழத் தொடங்கியபோதும், பனிமூட்டம் குறையாமல் நீடித்தது. அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேறும் புகையுடன் பனிமூட்டமும் கலந்து காணப்பட்டதால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்ததுபோலக் காட்சியளித்தது.