FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெடுந்தூர ஓட்டப்போட்டி: ஆணையா் தொடங்கிவைத்தாா்

தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

6 வினாடிகள் முன்பு
போட்டியைத் தொடங்கிவைத்தாா் மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா.
பகிர்:

தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடையே உடற்தகுதி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், இளைஞா்களிடையே உடற்பயிற்சி கலாசாரத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையாக அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரோஸி தலைமை வகித்தாா். போட்டியை மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதில், 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் இலக்காக வைத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த ஓட்டம், ஜாா்ஜ் சாலை, பெல் ஹோட்டல் சந்திப்பு, ரோச் பூங்கா, கடற்கரைச் சாலை, ரயில்வேகேட் வழியாகச் சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. போட்டியில் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement