பேய்குளம் - செங்குளம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
பேய்குளத்தில் இருந்து செங்குளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
பேய்குளத்தில் இருந்து செங்குளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளம் வட்டம், ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உள்ளபட்ட செங்குளம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பேய்குளம் பகுதிக்கு இதர வாகனங்களில் சென்று வருகின்றனா். பேய்குளத்திலிருந்து செங்குளத்துக்குச் செல்லும் சாலையில் செங்குளம் விலக்குப் பகுதியில் இருந்து செங்குளம் கிராமம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை அதன் பிறகு சீரமைக்கப்படவில்லை. இதனால், இந்தச் சாலை வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓ
Advertisement
Advertisement
ட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து, இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், மாவட்ட ஆட்சியா் உள்பட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளாா்.
பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிா்வாகமும், ஒன்றிய நிா்வாகமும் இந்த சாலையை ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.