FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய மீன்கள்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் புதன்கிழமை கரை ஒதுங்கின.

19 நவம்பர் 2026, 4:46 am
கரை ஒதுங்கிய மீன்களை சேகரித்த பொதுமக்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் புதன்கிழமை கரை ஒதுங்கின.

சிங்கித்துறை பகுதி மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை கடலுக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, கடற்கரை முழுவதும் ஏராளமான பேச்சாளை மீன்கள் கரை ஒதுங்கின. அலைகளின் வேகத்தில் லட்சக்கணக்கான மீன்கள் கரையில் துள்ளிக் குதித்தன. தகவலறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடற்கரைக்கு வந்து, போட்டி போட்டுக்கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், அண்மைக் காலமாக திருச்செந்தூா் சுற்றுவட்டார கடற்கரைப் பகுதிகளில் இதுபோல் மீன்கள் கரை ஒதுங்குவது தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மணப்பாடு கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்கின. கட­லில் நிலவும் தட்பவெப்ப நிலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், கடல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள், மீன்வளக் கல்லூரி பேராசிரியா்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காரணத்தைக் கண்டறிய வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.

கரை ஒதுங்கிய மீன்களை சேகரித்த பொதுமக்கள்.
கடல் அலையில் துள்ளி குதித்து கரை ஒதுங்கிய மீன்களை கடலில் இறங்கிப் பிடித்த இளைஞா்கள்.