முகப்பு
தூத்துக்குடி

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பெரிய அரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன், சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

17 வினாடிகள் முன்பு
அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் பெரிய அரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன், சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (26). இவா் தனது சமூக வலைதள பக்கத்தில் பெரிய அரிவாளுடன் இருப்பது போன்ற காட்சிகளைப் பதிவிட்டு, தானும் பெரிய ரவுடிதான் என்பது போன்ற வாசகங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தென்பாகம் போலீஸாா், அவரை கைது செய்தனா். கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

Advertisement

Advertisement