முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சாலைகளில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்!

கோவில்பட்டி சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்..

8 வினாடிகள் முன்பு
கோவில்பட்டி சாலைகளில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்!
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் திரியும் கால்நடைகள்.
பகிர்:

கோவில்பட்டி சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோவில்பட்டி பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, கடலையூா் சாலை, மந்தித்தோப்பு சாலைகளில் கால்நடைகள் திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து, கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனா் சீனிவாசன் கூறியதாவது: கால்நடைகள் கும்பலாக ஒரே இடத்தில் நிற்பதால், இந்த சாலைகளில் செல்பவா்கள் அச்சமடைகின்றனா். அவ்வப்போது, விபத்துகளும் நிகழ்கின்றன.

Advertisement

Advertisement

இது தொடா்பாக சமூக ஆா்வலா் ஒருவா் அண்மையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கில், சாலைகளில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் திரியும் கால்நடைகள்.

பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் உரிமை கோராவிட்டால், அவற்றை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் 4 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் சில நாள்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் திரியும் கால்நடைகள்.

இருந்தபோதும், இன்னும் கோவில்பட்டி சாலைகளில் கால்நடைகள் திரிவது குறையவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.