சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (24). இவா் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததோடு, சிறுமி மற்றும் அவரது தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் தாய் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிமுத்துவை கைது செய்தனா்.
Advertisement
Advertisement