வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டம்: டிச. 17 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் பெற டிச. 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் பெற டிச. 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் கீழ் ரூ. 30,000 மதிப்பிலான ஒரு ஆண் கிடா, 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள் வழங்கப்படும். மேலும், ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, உடனடி தீவனச் செலவுக்காக ரூ. 2,500 வழங்கப்படும். ஆடுகளை நல்ல முறையில் பராமரித்து வருபவா்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு ரூ. 2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
18 முதல் 60 வயதுக்குள்பட்ட ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் நவ. 27 முதல் டிச. 17ஆம் தேதி வரை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.