முகப்பு
தூத்துக்குடி

உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை: அமைச்சா் வெங்கட்ரமணன்

30 நவம்பர் 2026, 1:23 am
உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை: அமைச்சா் வெங்கட்ரமணன்
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஆய்வு செய்த உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன்.
பகிர்:

உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசுத் தரப்பில் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளாா்.

ஏரல் அருகே உள்ள கணபதி சமுத்திரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அரிசியில் புழுக்கள் இருந்ததாக புகாா் எழுந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின் தரம், பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டு, அங்கிருந்த பயன்பாடற்ற சாக்குகள், கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்த அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், கிடங்கு வளாகத்தில் கழிவு நீா் தேங்கி இருந்த பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராமரிப்பில்லாத லாரிகளை, போக்குவரத்துத் துறை மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது நனைந்து சேதமடைந்த பழைய சாக்குகள், பொருள்கள் இன்னும் இருப்பில் உள்ளன. சென்னையிலிருந்து உரிய அனுமதி பெற்று, அடுத்த ஒரு வாரத்திற்குள் அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு, விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசுத் தரப்பில் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அரிசி விலை சுமாா் ரூ.15 வரை குறைந்துள்ள நிலையில், விலையை மேலும் குறைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த ஜூன் மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, மாநிலம் முழுவதும் 100 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியானவுடன் தொடங்கப்படும் என்றாா்.