FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சமூக வலைதளத்தில் ஆயுதத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் கைது

ஆறுமுகனேரியில் கத்தி, அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

4 October 2026, 2:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆறுமுகனேரியில் கத்தி, அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி சிறப்பு உதவி ஆய்வாளா் தாமஸ், காவல்துறையினா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டும் வகையில், இன்ஸ்டாகிராமில் விடியோவை பதிவிட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விடியோ பதிவிட்ட 16 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments