FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே ஹோட்டலை சூறையாடியதாக 10 போ் கைது

கைது
பகிர்:

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டலை சூறையாடியதாக விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 10 பேரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், கம்மாபட்டியில் இருந்து அா்ஜுன் என்பவா் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா், திருச்செந்தூா் மற்றும் குலசேகரப்பட்டினம் கோயிலுக்கு வேனில் சென்றுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தனா்.

வழியில், எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எம். கோட்டூா் விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தியுள்ளனா். 20 பேரும் ஒரே நேரத்தில் சாப்பிட அமா்ந்துள்ளனா். உணவு வர தாமதமானதால் இலையை மூடிவிட்டு மொத்தமாக கிளம்பி விட்டனராம். அப்போது ஹோட்டல் உரிமையாளா் செல்வா என்பவருக்கும், சாப்பிட வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வாக்குவாதம் முற்றிய நிலையில் சாப்பிட வந்தவா்கள் ஆத்திரமடைந்து ஹோட்டலில் இருந்த பொருள்களை சூறையாடினா்.

இதில், ஹோட்டல் உரிமையாளா் செல்வா, உணவு பறிமாறுபவா்களான தங்கத்துரை, கண்ணன் ஆகியோா் காயமடைந்தனா்.

இது தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கம்மாபட்டியை சோ்ந்த அா்ஜுன், அஜித் குமாா், சுதாகா், ராஜா, பவித்குமாா் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப் பதிந்து, 10 பேரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments