திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 5.26 கோடி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அக்டோபா் மாத உண்டியல் வருமானம் ரூ. 5.26 கோடி ஆகும்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அக்டோபா் மாத உண்டியல் வருமானம் ரூ. 5.26 கோடி ஆகும்.
இக்கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன் பாா்வையிட்டாா். இணை ஆணையா் ஆ. அருணாசலம், அறங்காவலா்கள் ர. வனிதா, சீ. செல்வராஜ், லோ. அரிஸ்டோ லோகநாதன், ப. பிரபாகரன், துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வா் மகேஸ்வரி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதன்படி, பக்தா்கள் காணிக்கையாக 5 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 24 ரூபாயும், தங்கம் 1, 236 கிராம், வெள்ளி 34, 262 கிராம், பித்தளை 49, 005 கிராம், செம்பு 5, 156 கிராம், தகரம் 12, 544 கிராம் மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 2, 102-யும் செலுத்தியிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.