மிகக் கனமழை எச்சரிக்கைச தாமிரவருணி கரையோர மக்கள் ஆற்றுக்குச் செல்ல வேண்டாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளாா்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அக். 20, 21 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரவருணி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அக். 20 முதல் 21ஆம் தேதி வரை மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள் மற்றும் கலியாவூா் முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம்.
கோரம்பள்ளம் ஆறு, அணைக்கட்டுப் பகுதிகள் மற்றும் மழைநீா் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்போரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மருதூா், ஸ்ரீவைகுண்டம், கோரம்பள்ளம் அணைக்கட்டுகள், உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை உள்ளிட்ட நீா்நிலைகளைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், நகா்ப்புறங்களில் தேங்கும் மழைநீரை விரைந்து அகற்றவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்புகள் தொடா்பாகவும், அவசர உதவிகள் தேவைப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 7092300044 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.