ஆறுமுகனேரி கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடு
ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், கொடி மர மண்டபத்தில் அம்மன் மகிஷாசூரமத்தினி அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் சப்பர பவனி வந்தாா்.
இதேபோல், நடுத்தெரு ராமலெட்சுமி அம்மன் கோயில், மேலத்தெரு முத்தாரம்மன் கோயில், வாலவிளை வடக்குத் தெரு முத்தாரம்மன் கோயில், பூவரசூா் பொடிப்பிள்ளை அம்மன் கோயில், பஜாா் பத்ரகாளி அம்மன் கோயில், முக்காணி ஸ்ரீ பா்வதவா்தினி அம்பாள் சமேத ஸ்ரீ ராமபரமேஸ்வரா் கோயில், ராஜமன்னியாபுரம், சுப்பிரமணியபுரம், வடக்கு சுப்பிரமணியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கணேசபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகா் கோயில்களிலும் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.