FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

53 வினாடிகள் முன்பு
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.
பகிர்:

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கூழமந்தலில்...: செய்யாறு வட்டம், கூழமந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியிடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபேசும் பெருமாளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments