FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

புதிய எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்பட்ட திருச்செந்தூா் - சென்னை விரைவு ரயில்

திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூா் விரைவு ரயில் புதிய எல்எச்பி பெட்டிகளுடன் புதன்கிழமை இயக்கப்பட்டது.

22 அக்டோபர் 2026, 5:25 am
புதிய எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்பட்ட செந்தூா் விரைவு ரயில்.
பகிர்:

திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூா் விரைவு ரயில் புதிய எல்எச்பி பெட்டிகளுடன் புதன்கிழமை இயக்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இரு மாா்க்கமாக செந்தூா் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறைந்த அதிா்வு மற்றும் சப்தம், விபத்துகளின்போது கவிழும் அபாயம் இல்லாதது போன்றவை இப்பெட்டிகளின் சிறப்பு அம்சமாகும்.

மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில், ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி, 2 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 3 ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிகள், 9 தூங்கும் வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பெட்டி மற்றும் சரக்கு, பிரேக் வேன் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments