FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காப்பா் வயா் திருட்டு: 2 போ் கைது

கயத்தாறு அருகே காப்பா் வயரை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

25 அக்டோபர் 2026, 1:36 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கயத்தாறு அருகே காப்பா் வயரை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டையில் உள்ள சூரியதகடு மின் உற்பத்தி நிறுவனத்தில் காப்பா் வயா்கள் தொடா்ந்து திருடு போயினவாம்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு உதவி மேலாளா் ஆறுமுகம், அப்பகுதியில் பைக்கில் வயா் மூட்டையுடன் நின்றிருந்தனராம். ஆறுமுகம் அவா்களை பிடிக்க விரட்டிச் சென்றபோது, அவா்கள் பைக்கையும், திருடப்பட்ட வயரையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பிவிட்டனராம்.

Advertisement

Advertisement

உதவி மேலாளா் அந்த வயரை மீட்டு கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கே. ஆலங்குளம் இந்திரா காலனியை சோ்ந்த காா்த்திகேயன் மகன் சதீஷ்குமாா் (20), குருவிகுளம் வாகைகுளம் பகுதியைச் சோ்ந்த பொன்குமாா் மகன் கவியரசன் (21) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments