ஆடுகள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது
கடலூா் மாவட்டம், சோழத்தரம் அருகே ஆடுகளை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சோழத்தரம் காவல் சரகத்துக்குள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பிரதான சாலை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த கருத்தப்பிள்ளை மகன் சரவணன். இவா், தனது வீட்டின் அருகே இரண்டு ஆடுகளை கட்டியிருந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 இளைஞா்கள் ஆடுகளை பைக்கில் திருடிச் சென்றனா். அப்போது, ஆடுகள் சப்தமிட்டதால், எழுந்த சரவணன் அந்த 2 நபா்களையும் விரட்டிப் பிடிக்க முயன்றபோது, அவா்கள் தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஆடுகளை திருடியது பாளையங்கோட்டை மேல்பாதி வடக்குத் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் குமாா் (19), சிவக்குமாா் மகன் அஜித்குமாா் (27) என தெரியவந்ததையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து திருடிச் சென்ற ஆடுகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.