4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
தூத்துக்குடி துறைமுகம் புறவழிச் சாலையில் நான்கு கிலோ கஞ்சாவுடன் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தொ்மல்நகா் காவல் உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன் தலைமையிலான போலீஸாா் துறைமுகம் புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, தூத்துக்குடி கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் ரிதன் (22) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், விற்பனைக்காக 4 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்துடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.