குரும்பூா் விநாயகா் கோயில் அகற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்
குரும்பூா் ரயில் நிலையம் அருகே இருந்த விநாயகா் கோயில் இடித்து அகற்றப்பட்டதைக் கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரும்பூா் ரயில் நிலையம் அருகே இருந்த விநாயகா் கோயில் இடித்து அகற்றப்பட்டதைக் கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான விநாயகா் கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி கடந்த 20-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மீண்டும் அதே இடத்தில் மத்திய அரசின் ரயில்வே துறை சாா்பில் கோயில் கட்டித் தரக் கோரியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டமும் உண்ாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் பகவதி பாண்டியன் தலைமையில் குரும்பூா் மெயின் பஜாரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாநிலச் செயலாளா் ஐயப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். இதில் கோமதிராஜ், மாவட்டத் தலைவா் மனோகா், மண்டலத் தலைவா் சுடலைகண், முருகன், ராஜா, ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.