FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை (ஆக. 8) நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:49 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை (ஆக. 8) நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு பணி வழங்கியுள்ளதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட ஆசிரியா்களை அப்பணியில் இருந்து விடுவிக்கக் கோரியும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநகராட்சியைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் சங்கத்துடன் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொருளாலா் சே. நீலகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள், திருவெறும்பூா், திருச்சி நகரம், திருச்சி மேற்கு, அந்தநல்லூா், மணிகண்டம், வையம்பட்டி ஆகிய வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 57 முதல் 60 வயதுக்குள்பட்ட ஆசிரியா்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனையின்படி மாநகராட்சியைக் கண்டித்து நடைபெற இருந்த ஆா்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொருளாளா் சே.நீலகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments