FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் செப். 9 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

9 செப்டம்பர் 2026, 11:25 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

மு.க. ஸ்டாலின் ஆலோசனை

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்பது தொடா்பாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியில் வருகின்ற செப். 25 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

அன்புமணி எச்சரிக்கை

நெரிசலான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம் என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி, சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

டி. ராஜா மருத்துவமனையில் அனுமதி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜாவுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விசாரித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Updated On : 9 செப்டம்பர் 2026, 11:25 am IST

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments