உபரி ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை நிறுத்த வலியுறுத்தல்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலப் பொருளாளரும், மாவட்டத் தலைவருமான சே. நீலகண்டன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆ. கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.
இதில், திருச்சி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது உபரி ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கினால் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் பாதிக்கப்படும். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, உபரி ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்தில் ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட துணைச் செயலா் சுரேஷ்ராஜ், மாவட்டப் பொருளாளா் வே. சிவகுமாா் மற்றும் வட்டார நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.