திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.21 கோடி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருமானம் ரூ. 4.21 கோடி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருமானம் ரூ. 4.21 கோடி.
இத்திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
இதையடுத்து ஆக. 31, செப். 1 ஆகிய இரு தினங்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தாா். துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன், முதுநிலை கணக்கு அலுவலா் சங்கரன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் பேச்சியம்மாள், ஆனந்தராஜ், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205-ம், தங்கம் 1022 கிராம், வெள்ளி 22,292 கிராம், பித்தளை 59,040 கிராம், செம்பு 4,362 கிராம், தகரம் 11,118 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1447-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.