திருச்செந்தூா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு மையத்தில் கைப்பேசிகளை வைத்து விட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு சென்றனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு மையத்தில் கைப்பேசிகளை வைத்து விட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு சென்றனா்.
தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் பக்தா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல முழுமையான தடை செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் அமல்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே, திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 1ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை உள்ள நிலையில், அந்த உத்தரவை விரிவுபடுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் இக்கோயிலில் பொது, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். 2 கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் உள்ள நிலையில் கோயில் சண்முக விலாசம் மண்டபம் முன் கூடுதலாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.