FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் முதல் குலசேகரன்பட்டினம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

2 செப்டம்பர் 2026, 11:54 pm IST
கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா்.
பகிர்:

திருச்செந்தூா் முதல் குலசேகரன்பட்டினம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

குலசேகரன்பட்டினம், கந்தசாமிபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை அவா் பாா்வையிட்டாா். மேலும், இயற்கைக்கு முரணாக கடலுக்குள் செயல்படுத்தப்படும் தூண்டில் வளைவு போன்றவற்றால் கடலரிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுத்து கடற்கரை அருகேயுள்ள பனை மரங்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத் தலைவா் காகா்லா உஷா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

இந்து முன்னணி மாவட்ட தலைவா் முத்துராஜ், மாவட்ட இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன், திருச்செந்தூா் ஒன்றிய பொறுப்பாளா் முத்தையா ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments