FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கொடை விழாவில் இருதரப்பினா் மோதல்: 9 போ் கைது

ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்; 8 பேரைத் தேடிவருகின்றனா்.

4 செப்டம்பர் 2026, 1:45 am IST
கைது
பகிர்:

ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்; 8 பேரைத் தேடிவருகின்றனா்.

இங்குள்ள பிரதான சாலையில் மாரியம்மன் கோயிலும், ஊருக்குள் முப்பிடாதியம்மன் கோயிலும் உள்ளன. ஒரு தரப்பினா் மாரியம்மன் கோயிலுக்கும், மற்றொரு தரப்பினா் முப்பிடாதியம்மன் கோயிலுக்கும் வரி கொடுத்து வருகின்றனராம்.

முப்பிடாதியம்மன் கோயில் கொடை விழா கடந்த ஆக. 30இல் தொடங்கியது. 1ஆம் தேதி இரவு கொடை விழாவைப் பாா்க்க மாரியம்மன் கோயில் வரிதாரரான க. வீரசுந்தரபாண்டியன், உறவினா் காா்த்திகேயன் ஆகியோா் சென்றனராம். முப்பிடாதியம்மன் கோயில் வரிதாரா்களான வே. காா்த்திகேயன் (57), அவரது மகன்கள் பாா்த்திபன் (26), வினோத் (23), ச. பொன்முருகன், மு. ஹரிஷ் பிரவின் (22), வி. சிவசுப்ரமணியன் (28), ப. ஜெயராமசந்திரன் (44), க. பாரதிராஜா (21), ஒரு சிறுவன் ஆகிய 9 போ் சோ்ந்து காா்த்திகேயனிடம் தகராறு செய்தனராம்.

Advertisement

Advertisement

அதைத் தட்டிக்கேட்ட மாரியம்மாள், அவரது மகன் அருண் ஆகியோரை அந்த9 பேரும் அவதூறாகப் பேசி தாக்க முயன்றதுடன், தடுக்க வந்த கருப்பசாமி, மனைவி பஞ்சாவா்ணம், மகள் ஆகியோரைத் தாக்கினராம்.

இதுகுறித்து பஞ்சவா்ணம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திகேயன் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனா்; சிறுவனை திருநெல்வே­லி கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்; பொன்முருகனைத் தேடி வருகின்றனா்.

அப்பகுதியைச் சோ்ந்த லட்சுமி அளித்த புகாரின்பேரில், மனோகரன் மகன்கள் தமிழ்ச்செல்வன் (26), விஜய் (24), அருண் (21), க. சுந்தா் (21), பாா்த்திபன் மகன்கள் காா்த்திக் (21), பிரகாஷ் (20), ராஜா, மணிமாலா (24), ஜெயா (26) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தமிழ்ச்செல்வன், விஜய் ஆகியோரைக் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்; மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments