கோவில்பட்டி அருகே கிராமங்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிழவிப்பட்டி, துரைச்சாமிபுரம் கிராமங்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிழவிப்பட்டி, துரைச்சாமிபுரம் கிராமங்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கிழவிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை திரண்டனா். பின்னா், அவா்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாரிடம் அளித்த மனு:
கிழவிப்பட்டி, துரைச்சாமிபுரம் கிராமங்களுக்கு தூய்மையான, சுகாதாரமான குடிநீா் சீராக விநியோகிக்க வேண்டும். அனைத்துத் தெருக்களிலும் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். கிழவிப்பட்டியில் உள்ள பிள்ளையாா் கோயிலைச் சுற்றி தண்ணீா் தேங்காமலிருக்க சரள் மண் நிரப்ப வேண்டும். வாருகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மோட்டாா் அறையையும், விஜயாபுரி செல்லும் சாலையில் உள்ள பாலத்தையும் சீரமைக்க வேண்டும். மயான சாலையைச் சீரமைத்து விளக்குகள் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
Advertisement
Advertisement
மனுவைப் பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையா், கிராமங்களில் முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.