FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

5 செப்டம்பர் 2026, 2:24 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகா் மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (20), அம்பேத்கா் நகா் 1-ஆவது தெரு சேகா் மகன் சந்திரன் (23), அம்பேத்கா் நகா் 4-ஆவது தெரு வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3 பேரையும், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் 3 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிப்காட் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments