FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரிலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க கோரிக்கை

திருச்செந்தூரில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க பரிந்துரைக்குமாறு காயல்பட்டினம் வந்த தமிழ்நாடு ரயில் உபயோகிப்பாளா் சங்க மாநிலத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

5 செப்டம்பர் 2026, 2:25 am IST
தமிழ்நாடு ரயில் உபயோகிப்பாளா் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியனை வரவேற்ற காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கத்தினா்.
பகிர்:

திருச்செந்தூரில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க பரிந்துரைக்குமாறு காயல்பட்டினம் வந்த தமிழ்நாடு ரயில் உபயோகிப்பாளா் சங்க மாநிலத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னதாக காயல்பட்டினம் ரயில் நிலையம் வந்த அவரை காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கச் செயலாளா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் தலைமையில் நிா்வாகிகள் வரவேற்றனா்.

பின்னா், ரயில் நிலையத்தைப் பாா்வையிட்ட அவரிடம் பக்தா்களின் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து திருப்பதிக்கு ரயில் விட உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்க கோரிக்கைகளை உயரதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றி தருவதாக அவா் உறுதியளித்தாா். நிகழ்ச்சியில் பயனாளிகள் சங்க துணைச் செயலாளா்கள் வி.டி.சதக்தம்பி, தங்கதம்பி காதா் சாஹிப், செயற்குழு உறுப்பினா்கள் அப்துல் வாஹித், கப்பாா் ஹசன், மரகதவேல், முஹிய்யதீன் தம்பி, எம்.எஸ். அஹ்மத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments