FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா 6ஆம் நாள் : சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் வீதியுலா!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 6-ஆம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

38 வினாடிகள் முன்பு
திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 6-ஆம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

கோயிலில் ஆக. 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின், 6- ஆம் நாளான சனிக்கிழமை காலையில், சுவாமி குமரவிடங்கப்பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். பகலில் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி மற்றும் ஸ்ரீ ஜெயந்திநாதா் எழுந்தருளினா். மாலையில் அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிவன் கோயிலில் இருந்து சுவாமி வெள்ளித்தேரிலும், வள்ளியம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏழாம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (செப். 6) அதிகாலை 5 மணிக்கு கோயிலில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு வள்ளி, தெய்வானை அம்மனுடன் சுவாமி வெற்றிவோ் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேருதல், மாலை 4 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments