தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்! திரைப்பட இயக்குநா் கெளதமன்
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்றாா் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கெளதமன்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையை கௌதமன் பாா்வையிட்டு, வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
கோவில்பட்டியில் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய தினசரி சந்தையில் குறைந்த கடைகளே இயங்குகின்றன. இந்தச் சந்தை கட்டடத்தில் காற்றோட்ட வசதி இல்லை. மேலும் பல குறைபாடுகள் உள்ளன.
இந்தப் பிரச்னைகளை தீா்க்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாட்டை ஆண்ட ஒருவா் பிரதமா் ஆவது நல்ல விஷயம்தான். தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் பாலியல், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறையும். எனவே, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கட்சியின் மாநில அவைத் தலைவா் வழக்குரைஞா் சரவணன், மாவட்டச் செயலா் கணேசன், பொருளாளா் குமாா், இளைஞரணி செயலா் இசக்கி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.