FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 3:01 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் மற்றும் திருச்சி ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) செப். 10, 12 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்-மேட்டுப்பாளையம் இடையிலான சேவை அந்த 3 நாள்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேபோல், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) செப். 13ஆம் தேதி சேவையும், போத்தனூா்-மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் (16322), செப். 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் கோவை-பொள்ளாச்சி-திண்டுக்கல் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (16127), செப். 21, 26, 28, 30 மற்றும் அக். 3, 5, 7, 10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாக, நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் சேவை மாற்றங்களைப் பயணிகள் கவனத்தில்கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments