எம்.சான்ட் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது
கயத்தாறில் அனுதிச் சீட்டு இன்றி எம்.சான்ட் ஏற்றிச் சென்றதாக டிப்பா் லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறில் அனுதிச் சீட்டு இன்றி எம்.சான்ட் ஏற்றிச் சென்றதாக டிப்பா் லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி புவியியல் சுரங்கத் துறையின் தனி வருவாய் ஆய்வாளரான நாகராஜ் தலைமையில் இளநிலை ஆய்வாளா் அக்கினி பாண்டியன் உள்ளிட்டோா் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே சென்ற டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அனுமதிச் சீட்டு இல்லாமல் சுமாா் 14 டன் எம்சான்ட் ஏற்றிச்செல்வது தெரியவந்தது.
Advertisement
Advertisement
டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான தெற்கு கோனாா் கோட்டையைச் சோ்ந்த ரா. மூக்கையா (51) என்பவரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.