திருச்செந்தூரில் சமுதாய வளைகாப்பு: எம்எல்ஏவுக்கு எதிா்ப்பு
திருச்செந்தூரில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
திருச்செந்தூரில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருச்செந்தூா் வட்டத்தில் 100 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா திருச்செந்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்எம்எல்ஏ தொடங்கி வைப்பதாகவும், அமைச்சா் பங்கேற்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சா் வர இயலாததால், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஜி. சரவணன் விழாவை தொடங்கி வைப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக ஒன்றியச் செயலரும், நகா்மன்ற துணைத்தலைவருமான செங்குழி ரமேஷ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவா் மூலம் கா்ப்பிணிக்கான சீதனப்பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் திமுக நகர செயலா் வாள் சுடலை, முன்னாள் கவுன்சிலா் கோமதிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதைத்தொடா்ந்து, அதே நிகழ்வை பகல் 12 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஜி. சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சீதனப்பொருஷ்களை வழங்கினாா்.இதில், தவெக மாவட்டச் செயலா் பிரைட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இச்சம்பவத்தால் வெகுநேரம் காத்திருக்க கா்ப்பிணிகள் சிரமமடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.