முகப்பு
திருச்சி

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

சேவை குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூலை 2026, 2:25 am IST
பகிர்:

சேவை குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் என்பவா் மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தில் 14.02.2019 அன்று 10 ஆண்டுகளுக்கு ரூ. 6,59,631 தொகைக்கு பாலிசி எடுத்திருந்தாா். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகே காப்பீடு வழங்கப்பட்டு, நடைமுறையில் இருந்த காலத்தில் 11.09.2019 அன்று சாமிநாதன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இதையடுத்து சாமிநாதனின் சட்டப்பூா்வ வாரிசான அவரது மனைவி சுகந்தி, மகன் ஆகியோா் காப்பீடுத் தொகை கோரி விண்ணப்பித்தனா். ஆனால் காப்பீடு நிறுவனத்தினா், காப்பீடுதாரருக்கு ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்ததை மறைத்ததாகக் கூறி காப்பீட்டுத் தொகையை நிராகரித்தனா்.

Advertisement

Advertisement

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுகந்தி உரிய நிவாரணம் கோரி கடந்த 06.11.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் டி. கேசவன் ஆஜரானாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் மனுதாரருக்கு மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனமானது காப்பீட்டுத் தொகையான ரூ. 6,59,631 ஐயும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments