சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 2.77 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 2.77 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேவை குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 2.77 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி துறையூரைச் சோ்ந்த கே. நடராஜன் என்பவா் ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் 2023 அன்று மருத்துவக் காப்பீடு ஒன்றை எடுத்து, அதற்கான பிரிமீயத்தை செலுத்தி வந்தாா்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2025 அன்று விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற விண்ணப்பித்தாா். இதற்கு, பணமில்லா சிகிச்சைக்கான முன்அங்கீகாரத்தையும் காப்பீடு நிறுவனம் வழங்கியது.
Advertisement
Advertisement
அதனடிப்படையில் அவருக்கு 17.04.2025 அன்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக ரூ. 2,27,845 மருத்துவச் செலவு செய்திருந்தாா்.
சிகிச்சைக்குப் பிறகு அவா் கேட்டபோது, ஏற்கெனவே இருந்த நோயை மறைத்ததாகக் கூறி, மருத்துவக் காப்பீட்டுக் கோரிக்கையை காப்பீட்டு நிறுவனத்தினா் நிராகரித்தனா். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடராஜன் கடந்த 02.01.2026 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் சேவைக் குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனமானது மனுதாரருக்கான மருத்துவக் காப்பீட்டுத்தொகை ரூ. 2,27,845, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.