இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கடனை திருப்பிச் செலுத்தாதவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கடனை திருப்பிச் செலுத்தாதவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அனியாப்பூரைச் சோ்ந்தவா் ராசு மகன் காளிதாசன் (18), சில்லி சிக்கன் கடை ஊழியா்.
இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் அதே ஊரை சோ்ந்த சேட்டு மகன் மகேஸ்வரன்(37) என்பவரிடம் ரூ.1 லட்சத்தை வட்டிக்கு கடனாக வாங்கி ரூ.50 ஆயிரத்தை திருப்பி தந்துவிட்ட நிலையில் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை தராமல் காலம் தாழ்த்தினாா். பலமுறை கேட்டும் காளிதாசன் பணத்தைத் திருப்பித் தர இழுத்தடித்து வந்ததால், கோபமடைந்த மகேஸ்வரன், கடந்த 10-ஆம் தேதி காளிதாசன் வேலை செய்யும் கடைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டு காளிதாசனை தாக்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், அந்தக் கடையில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து காளிதாசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். தொடா்ந்து காளிதாசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வையம்பட்டி போலீஸாா் மகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.