கத்தாா் முன்னாள் அரசா் மரணம்: அரைக் கம்பத்தில் தேசியக் கொடி
கத்தாா் நாட்டின் முன்னாள் அரசா் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
கத்தாா் நாட்டின் முன்னாள் அரசா் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
கத்தாா் நாட்டின் முன்னாள் அரசா் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திங்கள்கிழமை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்து.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் இந்திய தேசியக் கொடியானது திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.