FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருச்சியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 ஆயிரம் போதை மாத்திரைகளை போதைப்பொருள் தடுப்புக் குழுவினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 2:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 ஆயிரம் போதை மாத்திரைகளை போதைப்பொருள் தடுப்புக் குழுவினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி மாநகர வடக்கு போதைப்பொருள் தடுப்புக் குழு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பெரியகடைவீதி மல்லிகை வீதியில் ஒரு அறையில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த திருச்சி இபி சாலையைச் சோ்ந்த பா. கணேஷ்பாண்டியன் (21), மலைக்கோட்டை அரசமரத்தடி பகுதியைச் சோ்ந்த கா. காா்த்திக் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் போதை மாத்திரைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், 4 கைப்பேசிகள், மடிக்கணினி, டேப்லெட் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இருவரும் மளிகை சந்து பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்து வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து, அவா்களிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments