FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை.

17 ஜூலை 2026, 5:07 am IST
சமயபுரம் மாரியம்மன் கோயில். - படம் - தினமணி
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.59 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், மற்றும் அலுவலா்கள்  முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா் .

இதில் முதன்மை திருக்கோயிலில் காணிக்கையாக ரூ. 1,59,74,181 ரொக்கம், 2 கிலோ 145 கிராம் தங்கம், 3 கிலோ 106 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நோட்டுகள் 274, வெளிநாட்டு நாணயங்கள் 952 ஆகியவை கிடைக்கப் பெற்றது .

Advertisement

Advertisement

இதற்கு முன்பு ஜூன் 23-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments