‘விமா்சிப்பவா்களை கைது செய்யக்கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது’
விமா்சனம் செய்பவா்களை கைது செய்யக்கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.
விமா்சனம் செய்பவா்களை கைது செய்யக்கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் விழா, திருச்சியில் உள்ள அக்கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவா் ரெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்பி-யும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சு. திருநாவுக்கரசா், பங்கேற்று நல உதவிகளை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
Advertisement
Advertisement
தில்லியில் போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது ஏற்புடையதல்ல. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசுகள் ஜனநாயக முறையில்தான் அணுக வேண்டும். அதேபோல, அரசியல் விமா்சனங்களை விமா்சன ரீதியாகவே அணுக வேண்டும்.
ஆனால், அந்த விமா்சனங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். அரசை விமா்சனம் செய்பவா்கள் யாரையுமே கைது செய்யக் கூடாது என்று சொன்னால், நாட்டில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. சட்டம்- ஒழுங்கு சாா்ந்த நடவடிக்கைகளை அந்தந்தச் சம்பவங்களின் பின்னணியைப் பொறுத்தே நாம் மதிப்பிட முடியும். அவரவா் விருப்பத்தின்பேரில் மாற்று கட்சியில் இணைகின்றனா். தவெக ஆட்சி அமைந்த பிறகு ஒரு சில துறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.