FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:13 am IST
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடைக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வாளா் அஜய்குமாா் தலைமையிலான திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினா் அந்த ரயிலில் நடத்திய சோதனையில், ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது.

அதைத் திறந்து பாா்த்தபோது, அதில் 2 மூட்டைகளில் 5 கிலோ எடையுள்ள சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

கடத்தல்காரா்கள் ரயில்வே பாதுகாப்புப்படையினரைக் கண்டதும் கடத்தி வந்த கஞ்சாவை போட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், அதை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் கே. விசுவநாதனிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா கடத் வந்தவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments