FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வளநாடு அருகே விதிகளை மீறி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

Updated On : 8 ஜூன் 2026, 2:04 am IST
பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், ஊத்துக்குளி கிராமம், ஆரியகோன்பட்டியில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி மண் அள்ளுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது இரண்டு டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், செவக்காளைபட்டியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, எருதுபட்டியை சோ்ந்த வேங்கையா மற்றும் ஆரியகோன்பட்டியை சோ்ந்த நந்தகுமாா் ஆகிய மூவரையும் பிடித்த தனிப்படையினா், அவா்களை வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணைக்கு பின் அவா்களை சிறையில் சிறையில் அடைத்தனா். இரண்டு டிப்பா் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments