FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி - அபுதாபி விமான சேவை 3 மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்

Updated On : 22 ஜூன் 2026, 2:45 am IST
விமான சேவை - படம் | ஏஎன்ஐ
பகிர்:

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு 3 மாதங்களுக்குப் பிறகு விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, அபுதாபி, ஷாா்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகளவிலான விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் போரையடுத்து திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கான விமானச் சேவை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த அதிகமானோா் திருச்சியில் இருந்து அரபு நாடுகளுக்குச் சென்று வந்த நிலையில், விமானச் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

அமெரிக்கா - ஈரான் போரின் வீரியம் குறையத் தொடங்கியதும் திருச்சியில் இருந்து துபை, ஷாா்ஜாவுக்கு படிப்படியாக விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஞாயிற்றுக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 112 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2. 25 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா்.

மலேசிய விமானம் 13 மணி நேரம் தாமதம்: மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு 9.25 மணிக்கு வரவேண்டிய மலிந்தோ விமானத்தில் திடீரேன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், 13 மணி நேரத் தாமதத்துக்குப் பின் மலிந்தோ விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments