திருமானூரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் திருமானூர், திருமழபாடி, மற்றும் இலந்தைகூடம் பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர்அரி.செல்வராசு தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதேபோல், கீழப்பழூர், ஏலாக்குறிச்சி அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விழாக்களில் சுற்றுவட்டார பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.